தாய்மொழிக் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கல்விச் செல்வமாக அமைந்துள்ளது. குழந்தைகள் தங்கள் தாயிடமிருந்து பேசக் கற்றுக் கொண்டு அதன் வழியாகவே சிந்திக்கவும் செயல்படவும் கருத்துகளைப் பரிமாறவும் செய்கின்றனர். அவ்வகையில் தமிழ்மொழி நீண்ட நெடிய இலக்கியவளம், பண்பாட்டுக் கூறுகள் ஆகியனவற்றைக் கொண்டு விளங்குவதால், தமிழ் இலக்கியங்களைப் பயில்வது ஆகச் சிறந்த வாழ்வியலுக்கு உறுதுணையாக விளங்குகிறது எனலாம். வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் 1991- ஆம் ஆண்டு முதலே தமிழ்த்துறை சிறப்புடன் இயங்கி வருகிறது. மொழிப்பாடங்களை மட்டுமே பயிற்றுவித்த தமிழ்த்துறையானது மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு கடந்த 2015 – 16 கல்வி ஆண்டு முதல் தமிழை முதன்மையாகக் கொண்ட தமிழ் இலக்கியத்துறையாக (டீ.யு வுயஅடை) செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் ஆய்வியல் நிறைஞர் (ஆ.Phடை) மற்றும் முனைவர் (Ph.னு) பட்ட ஆராய்ச்சிப்படிப்புகளையும் வழங்கி வருகிறது. தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், ஓவியம், நூல் வெளியீடு, கல்லூரி மற்றும் மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் என அனைத்திற்கும் தயார்படுத்துவதில் தகுதிவாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு சிறந்த முறையில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ‘கதம்பம்’ என்ற நுண்கலை மன்ற அமைப்பு கல்லூரியின் அனைத்துத்துறை மாணவர்களின் தனித்திறமைகளை வளர்த்தெடுக்கின்றது. தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் இலக்கியம் சார்ந்த வினாக்களே அதிகம் கேட்கப்படுவதால் தமிழ் இலக்கிய அறிவு தற்கால அரசு வேலைவாய்ப்புக்கு இன்றியமையாததாக விளங்குகிறது. அது மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ்ப்பண்பாடு சார்ந்த பள்ளிகளில் தமிழுக்கு வரவேற்பு உள்ளதால் உலகளாவிய பணி வாய்ப்புக்கும் தமிழ் இலக்கியம் பயிலவேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அறிஞர்களின் சொற்பொழிவுகள், மொழிவல்லுநர்களின் பயிலரங்குகள் வாயிலாக மாணவர்களுக்கு தனித் திறன்களை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் நோக்கில் சிறந்த நூலகக்கட்டமைப்புடன் தமிழ்துறையானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடுதலாக தேசிய மாணவர்ப்படை, நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டுத்துறை ஆகியவற்றில் மாணவர்களை பங்குபெற செய்து மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற தனி கவனம் செலுத்துகிறது.

-
Commerce
-
Computer Science
-
Tamil
-
English
-
Management
-
Mathematics
-
Social Work
-
Doctorate Programs