கல்விச்சிறப்பு
எங்கள் துறை அறிவுப் பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றலை ஊக்குவிக்கும் பண்பாட்டை வளர்க்கின்றது.
தமிழ்த் துறை, தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் பெருமையை கற்றுத் திளைக்கும், பாரம்பரியத்துடன் புதிய படைப்புகளை உருவாக்கும் துறை.
எங்கள் துறை அறிவுப் பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கற்றலை ஊக்குவிக்கும் பண்பாட்டை வளர்க்கின்றது.
உயர்ந்த தகுதியும், சிறந்த கற்பித்தலும் வழிகாட்டலும் குறித்த அர்ப்பணிப்பும் கொண்ட பேராசிரியர்களால் எங்கள் துறை வழிநடத்தப்படுகிறது.
பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளின் மூலம் படைப்பாற்றல், தொடர்பு திறன் மற்றும் தீவிர சிந்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கின்றது.
உலகில் தோன்றிய மொழிகளுள் உயர்வானதாகப் போற்றப்படுவது தமிழ் மொழியாகும். தமிழ் இலக்கியங்கள் தனி மனித வாழ்வுக்கு வழிகாட்டுவதோடு பொது நல வாழ்வுக்கும் பயனுள்ள அறிவினை நல்குவதில் முன்னிற்கிறது. தமிழக அரசின் வேலைவாய்ப்புகளைப்பெற தமிழ் அறிவும், தமிழ் இலக்கிய அறிவும் மிகுதியாகத் தேவைப்படுகின்றது. இச்சீரிய நோக்கத்தினைக் கருத்தில் கொண்டு, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி சிறந்த முறையில் தமிழ் இலக்கியங்களைக் கற்பித்து அதன் மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாய்மொழிக் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாத கல்விச் செல்வமாக அமைந்துள்ளது. தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், ஓவியம், நூல் வெளியீடு, கல்லூரி மற்றும் மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் என அனைத்திற்கும் தயார்படுத்துவதில் தகுதிவாய்ந்த பேராசிரியர்களைக் கொண்டு சிறந்த முறையில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ‘கதம்பம்’ என்ற நுண்கலை மன்ற அமைப்பு கல்லூரியின் அனைத்துத்துறை மாணவர்களின் தனித்திறமைகளை வளர்த்தெடுக்கின்றது. தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் இலக்கியம் சார்ந்த வினாக்களே அதிகம் கேட்கப்படுவதால் தமிழ் இலக்கிய அறிவு அரசு வேலைவாய்ப்புக்கு இன்றியமையாததாக விளங்குகிறது. அது மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ்ப்பண்பாடு சார்ந்த பள்ளிகளில் தமிழுக்கு வரவேற்பு உள்ளதால் உலகளாவிய பணி வாய்ப்புக்கும் தமிழ் இலக்கியம் பயிலவேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ் அறிஞர்களின் சொற்பொழிவுகள், மொழிவல்லுநர்களின் பயிலரங்குகள் வாயிலாக மாணவர்களுக்கு தனித் திறன்களை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளுக்குத் தயார்படுத்தும் நோக்கில் சிறந்த நூலகக்கட்டமைப்புடன் தமிழ்துறையானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கூடுதலாக தேசிய மாணவர்ப்படை, நாட்டு நலப்பணித் திட்டம், விளையாட்டுத்துறை ஆகியவற்றில் மாணவர்களை பங்குபெற செய்து மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற தனி கவனம் செலுத்துகிறது.
தமிழ்த் துறை பரந்த வாசிப்பறைகள், நவீன ஸ்மார்ட் கிளாஸ் அறைகள் மற்றும் இலக்கிய ஆய்வுகளுக்கான சிறப்பான வளங்களுடன் மாணவர்களின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனோபாவத்தை ஊக்குவிக்கின்றது. மொழி வளர்ச்சி மற்றும் இலக்கியப் பயிற்சிக்காகத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
எங்கள் தமிழ்த்துறை பட்டதாரிகள் ஆசிரியர்கள் (பள்ளி, கல்லூரி), இந்து சமய அறநிலையத்துறை, குருப் 2,4,8, செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம், இந்திய ஆட்சிப் பணி, சுற்றுலா வளர்ச்சித் துறை, கல்வெட்டியல் துறை, ஓலைச் சுவடியியல் துறை, திரைப்படத் துறை, பதிப்புத்துறை, வானொலி, தொலைக்காட்சி, தமிழ் வளர்ச்சித் துறை, சமூக சேவகர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள், செய்தி ஆசிரியர்கள், மொழி வல்லூநர்கள், சொற்பொழிவாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சிறந்து விளங்குகிறார்கள். துறை, சிறந்த மொழி நுணுக்கம் மற்றும் ஆராய்ச்சி திறனை வளர்க்கும் சூழலை உருவாக்கி, மாணவர்களை திறமையான எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்குகிறது.
0k+
0+
0%
0+